ட்ரம்ப் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்லவுள்ளார் கிம்

Classic

அதிபர் ட்ரம்ப் விடுத்த அழைப்பை ஏற்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் விரைவில் அமெரிக்கா செல்லவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு,  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா விடுதியில் நடைபெற்றது.  இந்த சந்திப்பின் போது, அமெரிக்கா - வடகொரியா  இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இதற்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பின் போது,  கிம் ஜாங் உன்னை அமெரிக்காவுக்கு வருமாறு டிரம்ப்,  அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இந்த அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல கிம் ஜாங் உன் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100

Parkavi