முதுமலை காப்பகத்தில் மானை வேட்டையாட முயன்ற சிறுத்தை..

Classic

முதுமலை புலிகள் காப்பகத்தில் மானை சிறுத்தை ஒன்று வேட்டையாட முயன்ற சம்பவத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில்  70 புலிகளும், 80 சிறுத்தைகளும் இருப்பதாக சமீபத்தில் நடைபெற்ற  கணக்கெடுப்பில் தெரிய வந்தது. தற்போது  பெய்து வரும் தொடர் மழையால் வனப்பகுதி பச்சை பசேலென காட்சி அளித்து வருகிறது. 

இதனால் முதுமலையை காண தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், முதுமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் சிலர், வனத்துறை வாகனத்தில் சுற்றி பார்க்க சென்றனர். 

அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் புதரிலிருந்து சிறுத்தை ஒன்று, அவர்கள் சென்ற வாகனத்தின் அருகில் வந்தது. பின்னர் அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மானை வேட்டையாட பதுங்கி பதுங்கி சென்றது. சிறுத்தை வருவதை கண்ட அந்த மான் வனப்பகுதிக்குள் ஒடி  சென்றது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைபடங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

 

News Counter: 
100
Loading...

aravindh