தமிழகத்தில் இன்று லோக் அதாலத்..!

Classic

தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் மக்கள் நீதிமன்றம் எனும் லோக் அதாலத் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியும், தேசியசட்டப் பணிகள் ஆணைக் குழுதலைவருமான நீதிபதி ரஞ்சன் கோகாய், இரு மாதங்களுக்கு ஒரு முறை மக்கள் நீதி மன்றம் எனும் தேசிய லோக் அதாலத்தை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் இன்று லோக் அதாலத் நடைபெறுகிறது. 

உயர் நீதிமன்றத்தில் 10 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆறு அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா அளவுகளில் 435 அமர்வுகளும், வங்கிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க 23 அமர்வுகள் என மொத்தம் 474 அமர்வுகள் வழக்குகளை விசாரித்து தீர்வை  ஏற்படுத்துகின்றது. 

இந்த அமர்வுகளில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 726 வழக்குகளும், நீதிமன்றங்களுக்கு வராத 59 ஆயிரத்து 164 வழக்குகளும் என மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 890 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் நசீர் அகமது தெரிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravindh