6-வது நாளை எட்டியது லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

share on:
Video

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் இன்று 6வது நாளை எட்டியுள்ளது. 

பெட்ரோல், டீசல் விலையை காலாண்டிற்கு ஒரு முறை நிர்ணயிக்க வேண்டும், சுங்கச்சவாடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சுமார் 75 லட்சம் லாரிகள் ஓடவில்லை. தமிழகத்தில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு டீசல் எடுத்துச் செல்லும் லாரிகள் சுமார் 80 சதவீதம் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால், மத்திய அரசுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தங்களுக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று 6வது நாளாக வேலை நிறுத்தம் நீடித்து வருவதையொட்டி ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வணிகர்கள் கடைகளை அடைத்து இன்று முழுஅடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

News Point One: 
6-வது நாளை எட்டியது லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
News Point Two: 
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம்
News Point Three: 
வேலை நிறுத்தம் இன்று 6வது நாளை எட்டியுள்ளது
News Counter: 
100
Loading...

aravindh