பாகிஸ்தான் உளவுத்துறை தலைவராக ஆசிம் முனீர் நியமனம்

share on:
Classic

பாகிஸ்தானில் அதிகாரமிக்க உளவுத்துறை தலைவராக பதவி வகித்து வந்தவர், லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தார்.

இவர் கடந்த 1-ந் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து அவரது இடத்துக்கு இம்ரான்கான் அரசு யாரை நியமிக்கப்போகிறது என்ற பெரும் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், பாகிஸ்தான் உளவுத்துறை தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பாக ராணுவ உளவுப்பிரிவில் தலைவராக பணியாற்றி வந்தார்.

சமீபத்தில்தான் இவருக்கு லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்தை ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா தலைமையிலான ராணுவ பதவி உயர்வு வாரியம் வழங்கியது.

News Counter: 
100
Loading...

sasikanth