மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை

Classic

வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வடமேற்கு வங்க கடல் மற்றும் ஒடிசாவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் வங்ககடல் பகுதியில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த தரை காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Point One: 
தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
News Point Two: 
வங்க கடலில் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்
News Point Three: 
மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை
News Counter: 
100
Loading...

aravindh