தொடரும் #METOO புகார்கள்...பாதிக்கப்பட்ட பெண்கள்

share on:
Classic

2006 - ம் ஆண்டு அமெரிக்க சமூக செயற்பாட்டாளர் புர்க்-கால் தொடங்கியது தான் இந்த #METOO.பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து இந்த ஹேஷ்டேக்- கில் தெரிவித்துவருகின்றனர். 

சின்மயி - வைரமுத்து : 

கவிஞர் வைரமுத்து குறித்து பிரபல பாடகி  சின்மயி அளித்துள்ள பாலியல் புகாரில் இசை நிகழ்ச்சிக்காக சுவிட்சர்லாந்த் சென்ற போது  வைரமுத்து அவர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு தன்னை அழைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ள அவர், அழைத்த போது நான் மறுத்தேன். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் வைரமுத்துவிற்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி மிரட்டினார். எனக்கு பயம் ஏற்பட்டது. உடனடியாக இந்தியா திரும்பி விட்டோம் எனத் தெரிவித்துள்ளார். 

இதற்கு பதில் அளித்துள்ள கவிஞர் வைரமுத்து, “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக் காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவது இல்லை. உண்மையை காலம் சொல்லும்” என தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்தார்.

நடிகை தனுஸ்ரீ தத்தா  :

தமிழில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ஆண்களே எனக்கு பிடிக்காது எனும் கதாபாத்திரத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் தனுஸ்ரீதத்தா. இவர் தற்போது ரஜினி நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய காலா திரைப்பட வில்லன் நானா படேகர் மீது புகார் வைத்துள்ளார். 

அவர் அளித்துள்ள புகாரில் 10 வருடங்களுக்கு முன்பு ‘ஹார்ன் ஓகே ப்ளஸ்’ இந்தி படத்தில் நடித்தபோது தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றும் அதை வெளியே சொன்னதால் ஆட்களை வைத்து மிரட்டினார் என்றும் தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார். இது குறித்து புகார் அளித்துள்ளார்  தனுஸ்ரீதத்தா. மேலும் நானா படேகருக்கு மகளிர் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம்.  

நடிகை கங்கனா ரணாவத் : 

தேசிய விருது பெற்ற ‘குயின்’ பட இயக்குநர் விகாஸ் பாஹல் மீது குற்றம் சாட்டினார். விகாஸ் பாஹல் தன்னை சந்திக்கும்போதெல்லாம் கட்டியணைப்பதாகவும், தனது தலைமுடியின் வாசனையை அவர் நுகர்வதாகவும் குற்றம் சாட்டினார். 

பெண் இயக்குனர் வின்டா நந்தா: 

மதுவில் எதையோ கலந்து கொடுத்து பிரபல இந்தி நடிகர் அலோக் நாத் தன்னை கற்பழித்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

News Counter: 
100
Loading...

sankaravadivu