தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மீது தலா 60 லட்சம் அபராதம் - ஸ்டாலின் கண்டனம்

share on:
Classic

இலங்கையில் சிக்கி தவிக்கும் தூத்துக்குடி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு தலா 60 லட்சம் அபராதமும், மூன்று மாதம் சிறை தண்டனையும் விதித்து இலங்கை கல்பிட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு தலையிட்டு மீனவர்கள் மீது போடப்பட்டுள்ள இந்த சட்டத்தை திரும்பப் பெற இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு அறிவுரை வழங்கிட வேண்டும் என்றும் அறிக்கையில் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

News Counter: 
100
Loading...

sasikanth