தமிழகத்திற்கு இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

share on:
Classic

திருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடாதது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு  இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையரின் இந்த அறிவிப்பு  ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில், தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை தமிழ்நாட்டு மக்களின் மனதில் விதைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் தேர்தலே நடந்ததில்லையா? என கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின்,   ஜெயலலிதா சிகிச்சையின் போது 3 தொகுதிக்கான தேர்தல்கள் பருவமழைக் காலமான நவம்பர் மாதத்தில் நடைபெற்றதாக கூறியுள்ளார்.

சுயாட்சிமிக்க அமைப்பான இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமும் - அரசு நிர்வாகத்தைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டிய தலைமைச் செயலாளரும் மத்திய - மாநில ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா? என்ற சந்தேகத்தை  நீக்கும் வகையிலும், ஜனநாயக நெறிமுறைகள் பாதுகாக்கப்படும் விதத்திலும் திருவாரூர் - திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்திட வேண்டும் என ஸ்டாலின் வலிறுத்தியுள்ளார்.

News Counter: 
100
Loading...

sasikanth