மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு

Classic

சென்னையில் நடைபெற இருக்கும் மாநில சுயாட்சி மாநாட்டிற்க்கான அழைப்பு கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வழங்கி அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில், திமுக தலைமையில் வரும் 30-ஆம் தேதி மாநில மாநில சுயாட்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோருக்கு  திமுக  அழைப்பு விடுத்துள்ளது. 

இந்நிலையில், இது தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் வழங்கி மாநாட்டில் பங்கேற்குமாறு கேட்டு கொண்டார்.

பின்னர், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி  திருச்சி சிவா, மாநாடு தொடர்பாக ராகுல் காந்தியை சந்தித்து அழைப்பு விடுத்ததாகவும், மாநாடு நடைபெறும் தேதியில் அவருக்கு வேறு சுற்று பயணம் உள்ளதால், சோனியா காந்தி மாநாட்டில் பங்கேற்பார் என ராகுல் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

முன்னதாக அவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார்.

News Counter: 
100
Loading...

aravindh