ஷாருக் படத்தில் இணையும் மாதவன் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்பு ஷாருக் படத்தில் இணையும் மாதவன்

ஷாருக் படத்தில் இணையும் மாதவன்

 ஷாருக் படத்தில் இணையும் மாதவன்

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் திரைப்படம் ஜீரோ. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா ஷர்மா மற்றும் கத்ரினா கைஃப் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் மாதவன் இணைகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக் கான் கடைசியாக நடித்த படம் ’ஜப் ஹேரி மெட் சேஜல்’. இப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஜீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அனுஷ்கா ஷர்மா மற்றும் கத்ரினா கைஃப் ஆகியோர் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தை ரெட் சில்லீஸ் எண்டர்டெய்ன்மென்ட் - கலர் எல்லோ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் ஷாருக் கான் குள்ள மனிதராக வருவார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான 1st லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டீஸர் வைரலாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கசெய்தது. இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் சல்மான்கான், ஆலியாபட், தீபிகா படுகோன், கரிஷ்மா கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் தற்போது இந்த பட்டியலில் நடிகர் மாதவனும் இணைந்திருப்பதாக தெரிய வருகிறது. இந்த படம் இந்தாண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர்.