சர்கார் படத்துக்குத் தடை கோரி வழக்கு..! நாளை உயர்நீதிமன்றம் விசாராணை

share on:
Classic

சர்கார் படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட அவசர வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், வருண் என்கிற ராஜேந்திரன், கதை, திரைக்கதை தன்னுடையது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

செங்கோல் என்ற தலைப்பில் உருவான தனது கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அந்தக் கதையை திருடி, சர்கார் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ளதாகவும், அந்த மனுவில் அவர் புகார் தெரிவித்து்ளளார்.

இந்த மனுவை அவசரவழக்காக விசாரிக்க வேண்டுமென முறையிடப்பட்டுள்ளதால், நாளை விசாரணை நடைபெறும் என நீதிபதி எம்.சுந்தர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth