ஸ்டெர்லைட்டை மூட  அரசாணை : உயர்நீதிமன்றம் அதிருப்தி...

Classic

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்குகள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் செல்வம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிட அறிவுறுத்தினர். அத்துடன், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பிய அவர்கள், மனித உயிர்களுக்கு அரசின் இழப்பீடு ஈடாகுமா என்றும் வினவினர். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.    

News Point One: 
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி
News Point Two: 
அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிட அறிவுறுத்தல்
News Point Three: 
வழக்கு விசாரணையை ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
News Counter: 
100

aravindh