மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் நியமனம் ரத்து

Classic

மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் நியமனத்தினை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 2 ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு மே 27ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செல்லதுரை  நியமிக்கப்பட்டனர். ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு ஒருவர் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும்.  ஆனால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள செல்லதுரைக்கு பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் கிடையாது என குற்றச்சாட்டு கூறப்பட்டது. 

எனவே அவரது பணி நியமனத்தை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், காமராஜர் பல்கலை கழகத்தின் துணைவேந்தராக செல்லதுரை நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

News Counter: 
100

aravindh