சவுதி அரேபியாவில், பெண்ணுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்ட நபர் கைது

Classic

சவுதி அரேபியாவில், பெண்ணுடன் சேர்ந்து சாப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள பிரபல ஹோட்டலில் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் இணைந்து காலை உணவு ருசித்துக் கொண்டிருந்தனர். இதனை வீடியோவாக பதிவு செய்த அவர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த ஆண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து பேசிய சவுதி காவல்துறையினர், பணி செய்யும் இடங்களில் ஆண்-பெண் பாகுபாடு அவசியம் என்பது விதி என்றும், இதனை மீறி செயல்பட்டதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் என்றும், சம்மந்தப்பட்ட ஹோட்டலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் கூறினர்.

நீண்ட தசாப்தங்களுக்கு பிறகு, சவுதியில் பெண் சுதந்திரம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது நடந்துள்ள இச்சம்பவம் சர்வதேச அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

News Counter: 
100

sasikanth