கவுத்தமாலாவில் மாயன் நாகரீக கட்டமைப்புகள் கண்டுபிடிப்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புகவுத்தமாலாவில் மாயன் நாகரீக கட்டமைப்புகள் கண்டுபிடிப்பு

கவுத்தமாலாவில் மாயன் நாகரீக கட்டமைப்புகள் கண்டுபிடிப்பு

கவுத்தமாலாவில் மாயன் நாகரீக கட்டமைப்புகள் கண்டுபிடிப்பு

கவுத்தமாலாவில் மாயன் கால அரசரின் கல்லறை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, மாயன் நாகரீகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள பல ஆராய்ச்சிகள் அங்கு நடத்தப்பட்டு வருகிறது. மாயன்கள் வாழ்ந்த காலத்தின் கட்டிடங்கள், பீங்கான் பொருட்கள் போன்றவைகளை கண்டுபிடித்து வந்த நிலையில் , தற்போது LiDar என்ற லேசர் மூலம் முழு நாகரீகத்தின் படம்பிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். 

கட்டிடக்கலைக்கு பெயர் போன மாயன்களின் வீடுகள், சாலை அமைப்புகள், நகரமைப்பு போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பார்த்த அளவை விட அதிகமான மாயன்கள் இந்த இடத்தில் வாழ்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இது 1,200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நாகரீகமாகும். இங்கு 10-15 மில்லியன் மனிதர்கள் வாழ்ந்திருக்க கூடும் எனவும் கூறப்படுகிறது. 1,200 ஆண்டுகளுக்கு முன்பே வெள்ளம் வந்தால் ஊருக்குள் வராமல் இருக்க தடுப்புகள், மாடித் தோட்டம், வணிகர்களுக்கான தனி பாதைகள், நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இவையனைத்தும், LiDAR என்கிற லேசர் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் மூலமாக லேசர் ஒளியை தேவையான இடத்தில் பாய்ச்சி 3D படம் எடுக்கப்படுகிறது. இந்த முறை அகழ்வாய்விற்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும், காடுகள் , மரங்கள் போன்ற தடைகள் இருந்தாலும் தெளிவாக படம் கிடைப்பதாகவும் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தற்போது 800sq மையில் நடத்தப்பட்டுள்ள ஆராய்ச்சி , கவுத்தமாலாவின் மேலும் 5000sq மையில்களுக்கும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புகளின் ஆவணப்படம் தொலைக்காட்சியில் பிப்ரவரி 6ம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.