
மெர்சல் படம் வெளியாகி ஒரு ஆண்டு ஆகும் நிலையில் அந்த படத்தை ரஜினியின் மூன்று முகம் படத்தை காப்பி அடித்து இயக்குனர் அட்லி, எடுத்ததாக எழுந்த பஞ்சாயத்து தற்போது வரை முடியவில்லை. தற்போது இழப்பீடாக 4 கோடி ரூபாய் கேட்டு அட்லிக்கு செக் வைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான நடிகர் விஜய்யின் மெர்சல் படத்தின் மூலக்கதையே ரஜினியின் மூன்று முகம் படத்தில் இருந்து உருவியதாக கூறி அந்த படத்தின் ரீமேக் உரிமையை வைத்திருக்கும் பைவ்ஸ்டார் கதிரேசன் என்பவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார்.
கடந்த ஒரு வருடமாக நடந்து வரும் இந்த பிரச்சினை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மெர்சல் படத்திற்கு அட்லி சம்பளமாக பெற்ற 12 கோடி ரூபாயில் 30 சதவீதத்தை அதாவது 4 கோடி ரூபாயை மூன்று முகம் படத்தின் உரிமையை வைத்துள்ள பைவஸ்டார் கதிரேசனுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த அட்லீ நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துகொள்ளுங்கள் அதை எதிர்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.