புலியுடன் போஸ் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார் !

share on:
Classic

அமைச்சர் ஜெயக்குமார் புலியுடன் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் தாய்லாந்து பயணம் மேற்கொண்ட அவர், அங்குள்ள உயிரியல் பூங்காவுக்கு சென்றார். 

அப்போது, புலியுடன் விளையாடி அமைச்சர் ஜெயக்குமார், புலியின் மீது கைவைத்து நின்றவாறு வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் வலைத்தளம் முழுவதும் வைரலாகி வருகின்றது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஜப்பான் சென்ற அமைச்சர் ஜெயக்குமார் மடியில் சிங்கக் குட்டி இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். 

உடன் ஒரு கவிதை ஒன்றையும்  வெளியிட்டிருந்தார். வீரமிகு 

தமிழ்நாட்டின் தீரமிகு 

தமிழ்மகன் சிங்கமென வந்ததை அறிந்த - சிங்கக்குட்டி 

ஒன்று தந்தையென நினைத்து தாவி அமர்ந்தது 

என்று எழுதியிருந்தார். 

 

News Counter: 
100
Loading...

sankaravadivu