அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சொத்து குவிப்பு வழக்கு: மதுரை கிளை அதிரடி 

share on:
Classic

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சரான பின்னர் பல கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியுள்ளதாகவும் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் எனவே நீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும்  மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 

News Counter: 
100
Loading...

sankaravadivu