நாடு திரும்பினார் பிரதமர் மோடி...பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து.. | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புநாடு திரும்பினார் பிரதமர் மோடி...பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து..

நாடு திரும்பினார் பிரதமர் மோடி...பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து..

#Narendramodi
February 13, 2018 226Views
நாடு திரும்பினார் பிரதமர் மோடி...பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து..

3 நாள் பயணமாக பாலஸ்தீனம்,  ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாடுகளுக்கு சென்ற மோடி,  ஓமன் சுல்தான், சையத் அல் சையதை சந்தித்து பேசினார். 

தொடர்ந்து இரு நாடுகள் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அடுத்ததாக ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு நடத்தினார். 

இதனைத் தொடர்ந்து புகழ்பெற்ற மஸ்கத் கிராண்ட் மசூதிக்கு சென்ற பிரதமர் மோடி, மசூதியை சுற்றிப் பார்த்தார். அங்கிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் பிரதமர் கையெழுத்திட்டார். 

இதனைத்தொடர்ந்து மோடிக்கு புத்தகம் ஒன்று பரிசளிக்கப்பட்டது.இந்த பள்ளிவாசல் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 3 லட்சம் டன்  செங்கற்களால் கட்டப்பட்டது.