அபுதாபியில் முதல் இந்து கோவில்...பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புஅபுதாபியில் முதல் இந்து கோவில்...பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்...

அபுதாபியில் முதல் இந்து கோவில்...பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்...

February 11, 2018 256Views
அபுதாபியில்  முதல் இந்து கோவில்...பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்...

அபுதாபியில் கட்டப்படவுள்ள முதலாவது இந்து கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். 

ஜார்டான், பாலஸ்தீனம் உள்ளிட்ட  நாடுகளைத் தொடர்ந்து பிரதமர் மோடி தமது அடுத்தகட்ட பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். தலைநகர் அபுதாபி வந்திறங்கிய மோடிக்கு பட்டத்து இளவரசர் முகமது பின் ஷயித் உற்சாக வரவேற்பளித்தார். இதைத்தொடர்ந்து, நாட்டிற்காக உயிர் நீத்த அமீரக படையினர் துயில் கொள்ளும் வாஹத் அல் கரமா நினைவிடத்திற்கு வருகை தந்த மோடி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அபுதாபியில் கட்டப்படும் முதலாவது இந்து கோயிலுக்கு மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். இதன்பின்னர், துபாய்க்கு புறப்படவுள்ள மோடி அங்குள்ள இந்தியர்களிடையே உரை நிகழ்த்தவிருக்கிறார். துபாய் பயணத்தை முடித்ததன் பிறகு அவர் இன்றைய தினமே ஓமன் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.