close
முகப்பு '2.O' பட ரிலீஸ் தேதி வெளியீடு


'2.O' பட ரிலீஸ் தேதி வெளியீடு

 '2.O' பட ரிலீஸ் தேதி வெளியீடு

ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரும், ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் '2.O' (Two Point O) படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

சங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், லைக்கா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் 2.0 படம் நவம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என லைக்கா புரொக்‌ஷன்ஸ் நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

இதேபோல், இயக்குனர் சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், VFX நிறுவனங்கள் ஒருவழியாக அவர்களது வேலைகளை முடிக்கும் நாள் குறித்து தம்மிடம் தெரிவித்திருப்பதாகவும், இதனால் படம் 29ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். 

இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரின் வில்லத்தனமான நடிப்பும், தமிழ் மக்கள் இதுவரை காணாத VFX காட்சிகளும் 2.O படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது.