கனமழை எதிரொலி...மும்பை சாலைகளில் வெள்ளபெருக்கு...

Classic

மும்பையில் பெய்துவரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடுகிறது.  

இந்த மாதம் தொடங்கியது முதலே அஸ்ஸாம், மகாராஷ்ரா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. இதன் ஒருபகுதியாக மும்பையில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. இதனால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளன. 

சாலைகளில் ஆறு போல பெருக்கெடுத்துள்ள வெள்ளத்தால், சாலைப் போக்குவரத்து முடங்கியுள்ளது. ரயில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

டப்பா வாலாக்கள் தங்கள் பணியை கைவிட்டுள்ளனர். இதனால், அலுவலக பணியாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மும்பை மாநகர் எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

மும்பையில் பெய்துவரும் கனமழையால், வாகனப் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ரயில்கள் இயக்கத்தில் தடை ஏற்பட்டுள்ள நிலையில், நகரில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. வதாலா, பைக்குல்லா, நல்லசோபோரா, தானே, ராய்காட், பல்காட் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. அங்கு 13-ம் தேதிவரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

News Point One: 
மும்பையில் பெய்துவரும் கனமழை
News Point Two: 
சாலைகளில் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடுகிறது.
News Point Three: 
எப்போது  இயல்பு நிலைக்கு திரும்பும் என பொதுமக்கள் கவலை
News Counter: 
100
Loading...

aravindh