பாடலாசிரியர்களை மட்டம் தட்டிய இசைஞானி இளையராஜா

share on:
Classic

இளையராஜா தனது இசையால்தான் பாடல் வரிகள் சிறப்பான இடத்தைப் பெற்றன என்ற கருத்தை சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கூறியுள்ளார்.

இளையராஜாவின் 75-ம் ஆண்டு பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமான விழா ஒன்று சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி. ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொண்ட இளையராஜா மாணவர்களுக்காக சில பாடல்களை பாடியும், இசைத்தும் காட்டியிருந்தார். அப்போது தளபதி படத்தில் இடம் பெரும் 'சுந்தரி கண்ணால் ஒரு செய்தி' பாடலை பாடி முடித்துவிட்டு இந்த வரிகள் மிகவும் சாதாரணமானவை அதை கவிஞர் வாலி தன் இசையில் பொருத்தியதால் தான் காலத்தால் அழியாத வரம் பெற்ற பாடலாக மாறியுள்ளது என கூறியுள்ளார். இதே போல கண்ணதாசன் பாடல் ஒன்றையும் குறிப்பிட்டு எம் எஸ் விஸ்வநாதனின் இசையால்தான் இந்த பாடல் சிறந்து விளங்குகிறது என்றும் கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

sankaravadivu