நண்பனின் இறப்பால் எனது இதயம் நொறுங்கி விட்டது - பில் கேட்ஸ்

share on:
Classic

பிரபல மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் (Paul Allen) உடல் நலக்குறைவால் காலமானார்...அவருக்கு வயது 65.

ஆலனுக்கு, ரத்த வெள்ளை செல்களில் உருவாகும் 'நாண் ஹாஜ்கின்ஸ் இம்ஃபோமா' என்ற நோய் தாக்கம் இருப்பது கடந்த 2009ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முடிவிற்கு வந்தது. இந்நிலையில், எதிர்பார்த்தபடி சிகிச்சை கைகூடாததை அடுத்து, ஆலன் காலமானார். ’தமது பழைய மற்றும் அன்பிற்குரிய நண்பன் மரணமடைந்த செய்தியைக் கேட்டு இதயம் நொறுங்கி விட்டதாக’ பில் கேட்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யம் உருவாவதற்கு ஆலன்  பிரதான காரணமாக  திகழ்ந்தார். மைக்ரோசாஃப்ட்டின் ’PC’ கணினியை தயாரித்ததில் பில் கேட்ஸின் பங்களிப்பைக் காட்டிலும் ஆலனின் பங்களிப்பு கணிசமானது என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

sankaravadivu