மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளை களவாடிய மர்ம நபர்கள்

share on:
Classic

புதுச்சேரி அருகே சாலையில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளை இரண்டு இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் திருடிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. குருமாம்பேட் ஹவுசிங் போர்டு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆடுகள் காணாமல் போய் வந்துள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் அங்கு மேய்ந்துகொண்டிருந்த லாவகமாக திருடி செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.

News Counter: 
100
Loading...

aravind