close
முகப்புநீட் : கருணை மதிப்பெண் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு


நீட் : கருணை மதிப்பெண் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

நீட் : கருணை மதிப்பெண் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

நீட் தேர்வில் தமிழ் வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற  மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில்,  சமீபவத்தில் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட 49 வினாக்கள் தவறாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். 

சரியான முறையில் தமிழில் மொழிமாற்றம் செய்யபடாமல் இருந்த வினாத்தாளால் தமிழ் வழி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறமுடியாமல் போக வாய்ப்புள்ளது என்றும், தவறாக தமிழில் மொழிமாற்றம் செய்யபட்டிருந்த 49 வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.