நீட் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கல்லூரியை தேர்வு செய்ய உதவும் செயலி அறிமுகம்

Classic

நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், மதிப்பெண்ணுக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்ய உதவும் மொபைல் ஆப் திருச்சியைச் சேர்ந்த இளைஞர்கள் வடிவமைத்துள்ளனர். ”நீட் எஸ்டிமேட்" ( NEET estimate)  என்று இந்த செயலி பெயரிடப்பட்டுள்ளது.  இந்த செயலியை ப்ளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

தரவிறக்கம் செய்து, நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை பதிவு செய்தால் கடந்தாண்டு நீட் முடிவுகளின்படி நடைபெற்ற மாணவர் சேர்க்கையை ஆய்வு செய்து, மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணுக்கு எந்தெந்த கல்லூரிகளில் MBBS, BDS இடம் கிடைக்க வாய்ப்புள்ளது, கல்லூரியின் முகவரி என்ன என்பது உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கின்றன.

 அதுமட்டுமின்றி தேசிய, மாநில, நிர்வாக ஒதுக்கீடுகள் குறித்தும்,  எஸ்சி, எஸ்டி, ஓபிசி, ஓசி  போன்றவற்றுக்கான ஒதுக்கீடு விபரங்களும் கிடைக்கும் வண்ணம் அந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரியை அறிய மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு ஏற்படும் தேவையற்ற குழப்பத்தை கலையவும் உதவும் வகையில் உள்ளது.
  

News Counter: 
100

Parkavi