நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக வைக்கப்பட்ட ட்ரம்ப் சிலை

share on:
Classic

நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக நியூயார்க் நகரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலை வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புரூக்ளின் நகரின் சாலையோரம் சிறிய அளவில் புல் வளர்க்கப்பட்டு அதில் சுமார் ஒரு அடிக்கு டிரம்பின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் பகுதியில் என் மீது "சிறுநீர் கழிக்கலாம்" என ஆங்கிலத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த சிலை குறித்து சிலையின் வடிவமைப்பாளர் தெரிவிக்கையில்,  டிரம்ப் ஒரு அதிபராக செயல்படவில்லை என்ற கோபத்தை வெளிப்படுத்தவே இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 

News Counter: 
100
Loading...

sankaravadivu