பாஜக ஆட்சியில் விவசாயிகள் நிம்மதியாக பயிரிடுகின்றனர் - பிரதமர் மோடி

Classic

'விவசாயிகளுக்காக பாஜக கொண்டு வந்துள்ள நல்ல திட்டங்களை நினைத்து காங்கிரஸ் கட்சியினர் தூக்கமின்றி தவிப்பதாக' பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

'MSP' எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டதை கொண்டாடும் விதமாக பஞ்சாப் மாநிலம் முக்ஸர் மாவட்டத்தில் பிரம்மாண்ட கூட்டம் நடைபெற்றது. 

இதில்,  ஆயிரக்கணக்கான விவசாயிகள் முன்னிலையில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, பாஜக ஆட்சியில் நாட்டு விவசாயிகள் நம்பிக்கையோடு பயிரிடுவதாக பெருமிதத்துடன் கூறினார். 

குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டதால் விவசாயிகள் நிம்மதியாக தூங்குவதாகவும், ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தூக்கத்தை தொலைத்து தவிப்பதாகவும் விமர்சித்தார். மேலும், கடந்த 70 ஆண்டுகளாக முந்தைய காங்கிரஸ் அரசால் விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாகவும் மோடி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

 

News Point One: 
பாஜக ஆட்சியில் விவசாயிகள் நிம்மதியாக பயிரிடுகின்றனர் - பிரதமர் மோடி
News Point Two: 
காங்கிரஸ் கட்சியினர் தூக்கமின்றி தவிப்பதாக' பிரதமர் மோடி விமர்சனம்
News Point Three: 
காங்கிரஸ் அரசால் விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பு
News Counter: 
100
Loading...

aravindh