கோலியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட பிரதமர் மோடி

Classic

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் சவாலை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது உடற் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு அதனை பிரதமர் நரேந்திர மோடி, தோனி உள்ளிட்டோருக்கு உடற் தகுதி சவால் விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கோலிக்கு தெரிவித்த பதிலில் விரைவில் தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிடுவேன் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது பிட்னஸ் வீடியோவை டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். அதில்  அதிகாலையில் பசுமையான சூழலில் யோகா செய்யும் பிரதமர் நரேந்திர மோடி அதன் பின் படிப்படியான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார். அவரின் இந்த உடற் பயிற்சி தான் இன்னமும் வலிமையான மனிதர்தான் என்பதை காட்டும் வகையில் அமைந்துள்ளது. பிரதமரின் இந்த புதிய உடற்பயிற்சி வீடியா சமூக வளைதளங்களில் வைரலாக வருகிறது.

 

News Point One: 
கோலியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி
News Point Two: 
கோலி  உடற் பயிற்சி வீடியோவை வெளியிட்டு, மோடி, தோனி உள்ளிட்டோருக்கு உடற் தகுதி சவால் விடுத்திருந்தார்
News Point Three: 
பிரதமரின் இந்த புதிய உடற்பயிற்சி வீடியா சமூக வளைதளங்களில் வைரலாக வருகிறது
News Counter: 
100

aravindh