ஆதார் எண்ணை ஓட்டுனர் உரிமத்துடன் இணைப்பது குறித்து ஆலோசனை

Classic

ஆதார் எண்ணை ஓட்டுனர் உரிமத்துடன் இணைப்பது குறித்து நிதின் கட்கரியுடன் ஆலோசித்திருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

வங்கி கணக்கு, சிம் கார்டு பெற என ஆதார் எண் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில், குற்றச் செயல்களில் ஈடுபடும் ஓட்டுனர்களை பிடிக்கும் வகையில் அதை ஓட்டுனர் உரிமத்துடன் இணைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரியுடன் ஆலோசித்திருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே, ஆதார் எண், தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100

Parkavi