close
முகப்பு குரங்கணி தீ விபத்து: ஓ.பி.எஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல்

குரங்கணி தீ விபத்து: ஓ.பி.எஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல்

March 12, 2018 242Views
 குரங்கணி தீ விபத்து: ஓ.பி.எஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல்

துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் குரங்கனி காட்டு தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

குரங்கணி மலைப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் சென்னை மற்றும் திருப்பூரில் இருந்து  ட்ரக்கிங் சென்ற 37 பேர் சிக்கி கொண்டனர். இதில் 9  பேர் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட 27 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போடி அரசு மருத்துவமனையில் உள்ள இவர்களுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இவருடன் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் சென்றார். மேலும், விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.