பாகிஸ்தான் இடைத்தேர்தலில் எதிர்கட்சியினர் ஆதிக்கம் - இம்ரான் கானுக்கு பின்னடைவு

share on:
Classic

பாகிஸ்தான் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை விட எதிர்கட்சி வேட்பாளர்கள் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது, அந்நாட்டு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அண்மையில் நடந்து முடிந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் ஒரே கட்சியைச் சேர்ந்த பல வேட்பாளர்கள் இரண்டிற்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதன்பின், தமக்கென ஒரு தொகுதியை மட்டும் தேர்வு செய்துகொண்டு மற்ற தொகுதிகளுக்கான பிரதிநிதி பொறுப்பை ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து, தேசிய சபைக்கான 11 தொகுதிகள் மற்றும் 24  மாகாண தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்ஸாஃப் கட்சிக்கும், முஸ்லீம்ஸ் லீக் நவாஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. 

தேசிய சபைக்கான 11 தொகுதிகளில் நவாஸ் கட்சி ஆறிலும், தெஹ்ரீக் கட்சி மூன்றிலும், சுயேட்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மையான தொகுதிகளில் நவாஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பது ஆளும் தெஹ்ரீக் கட்சியினருக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனிடையே, மாகாண  தொகுதிகளிலும் நவாஸ் கட்சி முன்னிலை பெற்றிருப்பதால்  பிரதமர் இம்ரான் கானுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 

News Counter: 
100
Loading...

sankaravadivu