நாமெல்லாம் ஒண்ணா இருக்கணும், எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புநாமெல்லாம் ஒண்ணா இருக்கணும், எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

நாமெல்லாம் ஒண்ணா இருக்கணும், எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

January 29, 2018 337Views
நாமெல்லாம் ஒண்ணா இருக்கணும், எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்  என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி,  பட்ஜெட் கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா நிறைவேற அனைத்து கட்சிகளும் உதவ வேண்டும் என்றும் பாராளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்  எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கும் மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.  

இந்தியாவைப் பற்றி  உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்கள்  நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். கிராமப்புற இந்தியா, விவசாயிகள், தலித்கள், பழங்குடியின மக்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனை மனதில் கொண்டு பட்ஜெட் இடம்பெறும் சிறப்பு அம்சங்கள் குறித்து நாடாளுமன்ற குழுக்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.