புலியாக இருக்க வேண்டிய அமைப்பு எலியாக உள்ளது - ராமதாஸ்

Classic

அனைத்து அதிகாரங்களும் மிக்க லோக் ஆயுக்தா சட்டத்தை  சட்டப்பேரவையைக் கூட்டி நிறைவேற்ற வேண்டும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ராமதாஸ், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தாவால், அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து நேரடியாக விசாரிக்க முடியாது என்றும், முதலமைச்சர் லோக் ஆயுக்தா சட்டத்தில் வருவார் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசுக்கு சாதகமான நபர்கள் லோக் ஆயுக்தாவில் இடம்பெற்றால் கொடுமைதான் நடக்கும் என்று கூறியுள்ள ராமதாஸ், முதலமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவர் அடங்கிய குழு தான் லோக் அயுக்தாவை தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் அபத்தமானதது என்று தெரிவித்துள்ளார். நீதித்துறையின் பிரதிநிதி இல்லாத லோக் ஆயுக்தா தேர்வுக்குழு, நம்பத்தகுந்ததாக அமையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravindh