பழிவாங்கும் முனைப்பில் அமலாக்கத்துறை செயல்படுகிறது - ப.சிதம்பரம்

Classic

தம்மை பழிவாங்கும் முனைப்பில் அமலாக்கத்துறையினர் செயல்படுவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான இடைக்கால தடை ஆகஸ்டு 7ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிதம்பரத்தின் முன் ஜாமீனுக்கு எதிராக விரிவான அறிக்கையை அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு தொடர்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவலறிக்கையில் திட்டமிட்ட குற்றம் குறித்தும் பொது ஊழியரின் பெயர் குறித்தும் எந்தவித தகவலும் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். 

மேலும், அமலாக்கத்துறையினர் தம் மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்துவதாகவும், இது பழிவாங்கும் நடவடிக்கை என்றும், குற்றச்சாட்டுக்கள் குறித்து நீதிமன்றத்தில் உரிய பதில் அளித்திருப்பதாகவும் சிதம்பரம் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravindh