ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாக் அணி 281 ரன்கள் முன்னிலை

share on:
Classic

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 281 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

ஐக்கிய அரபு எமீரகத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் ஆடிய பாகிஸ்தான் அணி 282 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின், முதல் இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வேகமாக ஆட்டமிழந்து, 145ரன்களுக்குள் சுருண்டனர்.

தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 2வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து, 282 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth