தோனி உடன் கைக்குலுக்கிச் சிரித்து பேசிய சோயப் மாலிக்

Classic

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் களமிறங்க தயாராகும் வகையில் வலைப்பயிற்சி மேற்கொண்டிருந்த தோனியை பாகிஸ்தானின் மூத்த வீரர் சோயப் மாலிக் சந்தித்து பேசினார். 

14-வது ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்க உள்ளது. இந்த தொடரில் களமிறங்க தயாராகும் வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். 

அப்போது, பாகிஸ்தான் அணியின் மூத்த வீரரான சோயப் மாலிக், இந்திய வீரர்கள் பயிற்சி செய்யும் பகுதிக்கு வந்தார். பின்னர், அங்கு அமர்ந்திருந்த தோனி உடன் அவர் கைக்குலுக்கிச் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்.

News Counter: 
100

aravindh