சீக்கிய காவலரின் தலைப்பாகையை கழற்ற வைத்து அவமதிப்பு

Classic

பாகிஸ்தானில் சீக்கிய காவலரின் தலைப்பாகையை ஒரு கும்பல் கழற்ற வைத்து அவமதிப்பு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் லாகூரை சேர்ந்த குலாம் சிங் என்பவர் காவல் துறை அதிகாரியாக உள்ளார்.  அவர் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில், தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், குடியிருப்பு பகுதிக்கு வந்த அறக்கட்டளை நிர்வாகி ஆசிப் அக்தர் ஹஸ்மி என்பவர், குலாம் சிங்கை  உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். 

மேலும் அவரை கட்டாயப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றினார். அதுமட்டுமின்றி, தனது அடியாட்கள் மூலமாக, குலாம் சிங்  தலைப்பாகையை அகற்றியுள்ளார். சீக்கிய மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பாகிஸ்தானிலிருந்து சீக்கியர்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவதாக குலாம் சிங் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து அவர் வெளியிட்டுள்ள காணொலிப்பதிவில், தமது தலைப்பாகை அகற்றப்பட்டதோடு தாக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravindh