விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்

share on:
Classic

விவசாயிகளுக்கு 90% மானியத்தில் சூரிய சக்தி மின் மோட்டார்கள் வழங்கப்படும் என்று 110வது விதி எண் கீழ் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் டெல்டா மாவட்டங்கள் அல்லாத விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.  நீலகிரி மாவட்டத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் பசுமை பூங்கா 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்றும் நீலகிரி நகரத்தில் வாகனம் நிறுத்தும் இடம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் எனவும் அவர் கூறினார்.

இதனைதொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, வாழை சாகுப்படி மேம்படுத்த சிக்கன நீர் மேலாண்மைக்காக  27.80 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் தோட்டகலை பட்டய படிப்பிற்கு கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இரண்டு ஆண்டு பட்டயப்படிப்பு துவக்கப்படும் எனவும் தெரிவித்தார். வேளாண் விரிவாக்க மையங்கள் 9 வட்டாரங்களில் புதிதாக துவங்கப்படும் என்று அவர் கூறினார்.

 

News Counter: 
100
Loading...

aravindh