காதலர்களுக்கு பூக்கொடுத்து உற்சாகப்படுத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புகாதலர்களுக்கு பூக்கொடுத்து உற்சாகப்படுத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்

காதலர்களுக்கு பூக்கொடுத்து உற்சாகப்படுத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்

February 14, 2018 214Views
காதலர்களுக்கு பூக்கொடுத்து உற்சாகப்படுத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்

காதலை போற்றும் வகையில் புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காதலர்களுக்கு பூக்களை கொடுத்து காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

புதுச்சேரியில் காதலர் தினத்தை முன்னிட்டு பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, படகு குழாம், கடற்கரை மற்றும் ஆரோவில் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தளங்களில் காதலர்கள் அதிகளவில் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் வகுப்புவாத சக்திகளிடமிருந்து காதலர்களை காப்பாற்றவும், சாதி, மத மறுப்பு திருமணங்களை  ஊக்குவிக்க வலியுறுத்தியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பாரதி பூங்காவிற்கு வந்திருந்த காதலர்களுக்கு பூக்களை கொடுத்து காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் சாதி, மதங்களை மறந்து கலப்பு திருமணம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு பதாகைகளையும் கையில் வைத்திருந்தனர்.