கட்டியதில் இருந்து தூர்வாரப்படாத கால்வாய்.. தொற்று நோய் ஏற்படும் அபாயம்..!

share on:
Classic

திருமங்கலம் அருகே கால்வாய் தூர்வாரப்படாததால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். 

மதுரை மாவட்டம், திருமங்கலம் கக்கன் காலனியில் 11 கோடி நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட கால்வாய் போதிய நிதி இல்லாமல், குண்டாறு வரை இணைக்கப்படாமல் இருந்தது. 

இந்நிலையில் அந்த கால்வாய், கட்டியதில் இருந்து சுமார் 6 வருடங்களாக  தூர்வாரப்படாமல் முட்புதர்கள் மண்டியிருப்பதால், நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

News Counter: 
100
Loading...

aravindh