10-க்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாய்..அடித்துக் கொன்ற பொதுமக்கள்

share on:
Classic

திருப்பூரில் 10க்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாயை பொதுமக்கள் அடித்து கொன்றனர். 

திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் நாட்டு நாய் ஒன்றை வளர்த்து வந்தநிலையில், வீட்டில் கட்டப்பட்டிருந்த நாய் திடேரென சங்கிலியில் இருந்து கழன்று தெருவில் ஓடியுள்ளது. 

அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் நடந்து சென்றவர்களை நோக்கி கடிக்கப் பாய்ந்த நாய், சுமார் 10-க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளது. 

இதனையடுத்து காயமடைந்தர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், படுகாயமடைந்த 2 பெண்கள் மட்டும் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனைத்தொடர்ந்து நாய் மீது ஆத்திரமடைந்த பொதுமக்கள், நாயை கல்லால் அடித்துக்கொன்றனர்.

News Counter: 
100
Loading...

sankaravadivu