தமிழகத்தில் மோசமான பயங்கரவாதச் சம்பவம் நடைபெற உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புதமிழகத்தில் மோசமான பயங்கரவாதச் சம்பவம் நடைபெற உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

தமிழகத்தில் மோசமான பயங்கரவாதச் சம்பவம் நடைபெற உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

February 14, 2018 137Views
தமிழகத்தில் மோசமான பயங்கரவாதச் சம்பவம் நடைபெற உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

தமிழகத்தில் மிக மோசமான பயங்கரவாதச் சம்பவம் நடைபெற உள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தின் நினைவு நாள் நிகழ்ச்சி பா.ஜ.க. சார்பில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் தடை விதித்து இருந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொன்.ராதா கிருஷ்ணன், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் மிக மோசமான பயங்கரவாதச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.