எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் அரசு பள்ளி கட்டடம்

share on:
Classic

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு மாணவ, மாணவிகள் அச்சத்துடன் கல்வி கற்று வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கரிசல்குளம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி கடந்த 65 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பள்ளி கட்டடத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளதால் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்ட செல்கிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 300 ஆக இருந்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை தற்போது 99 ஆக குறைந்துள்ளது. 

பாழடைந்து காணப்படும் பள்ளி கட்டடத்தால் மாணவர்கள் தினமும் அச்சத்துடனே பள்ளிக்குச் சென்று வருகின்றனர். பள்ளியின் எந்த பகுதியை பார்த்தாலும் பெயந்து விழுந்த செங்கற்கள், வெளியே வந்த கான்கிரீட் கம்பிகள், உடைந்த சன்னல், கதவுகள் என்றே காட்சியளிக்கின்றன. இதனால் மாணவர்கள் வகுப்பறையை தவிர்த்து விட்டு வெளியே அமர்ந்து படிக்கின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த பள்ளிக்கு தலைமையாசிரியர் இல்லாததால் , ஆசிரியர்களும் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவது இல்லை. இதனால் தடைகளை கடந்து வந்து இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் உயர்ந்ததாக தெரியவில்லை.

எனவே பள்ளி மாணவர்களின் விலைமதிப்பற்ற உயிரையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

News Counter: 
100
Loading...

aravindh