பிரபல எழுத்தாளர் சந்திரசேகர் ராத் உடல்நல குறைவினால் காலமானார் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புபிரபல எழுத்தாளர் சந்திரசேகர் ராத் உடல்நல குறைவினால் காலமானார்

பிரபல எழுத்தாளர் சந்திரசேகர் ராத் உடல்நல குறைவினால் காலமானார்

February 10, 2018 136Views
பிரபல எழுத்தாளர் சந்திரசேகர் ராத் உடல்நல குறைவினால் காலமானார்

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் சந்திரசேகர் ராத், உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஷ்வரில் வசித்து வந்தவர் சந்திரசேகர் ராத்.  இலக்கிய துறைக்கு இவர் ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு இவரது பெயரை தேர்வு செய்திருந்தது.

இந்நிலையில், உடல்நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட  அரசியல் தலைவர்கள் சந்திரசேகர் ராத்  மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.