வடசென்னை அனல்மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

Classic

வடசென்னை அனல்மின்நிலையத்தின் இரண்டாவது அலகின் மற்றொரு கொதிகலனிலும் பழுது ஏற்பட்டுள்ளததால் 1200 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகளில் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் இரண்டாவது நிலையின் முதல் அலகில் கொதிகலன் குழாயில் நேற்று பழுது ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த நிலையின் இரண்டாவது அலகிலும் கொதிகலன் குழாய் பழுது ஏற்பட்டு 600 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு அலகிலும் ஏற்பட்ட பழுது காரணமாக 1200 மெகாவாட் மின்உற்பத்தி தடைபட்டுள்ளது. 

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News Counter: 
100

sankaravadivu