close
முகப்புபிரதமர் மோடி 3 நாடுகள் சுற்றுப் பயணம் 

பிரதமர் மோடி 3 நாடுகள் சுற்றுப் பயணம் 

பிரதமர் மோடி 3 நாடுகள் சுற்றுப் பயணம் 

3 நாடுகள் சுற்றுப் பயணத்தை பிரதமர் மோடி இன்று மேற்கொள்ள உள்ளார். 

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ‘நார்டிக்’ நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் இந்தியா பங்கேற்கும் உச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது. 

இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும், நார்டிக் நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்கின்றனர். இதேபோல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு ‘பொதுவான எதிர்காலத்தை நோக்கி’ என்னும் தலைப்பில் வரும் 18-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. 

இதில் பிரதமர் மோடி உள்பட 53 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த 2 மாநாடுகளிலும் பங்கேற்பதற்காக மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சுவீடன் செல்கிறார். 

இன்று இரவு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்றடையும் மோடி நாளை சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வெனை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது இருதரப்பிலும் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவீடன் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை இரவு மோடி அங்கிருந்து லண்டன் செல்கிறார். இங்கிலாந்தில் மட்டும் அவர் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். வருகிற 18-ம் தேதி காலை இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை சந்தித்து, பிரிவினைவாதம், எல்லைதாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக அவர்கள் விவாதிக்கின்றனர். 

இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு 20-ம் தேதி மோடி ஜெர்மனி செல்கிறார். அங்கு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை அவர் சந்தித்து பேசுகிறார்.