அதிபர்கள் டிரம்ப் - கிம்மின் சந்திப்பை கண்டுகொள்ளாத வட கொரிய மக்கள்

Classic

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிங்கப்பூர் சந்திப்பின் மீது வட கொரிய மக்கள் ஆர்வம் காட்டவில்லை என பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. 

அதிபர்கள் டிரம்ப் - கிம்மின் சந்திப்பை உலக மக்கள் வியப்புடனும், எதிர்பார்ப்புடன் கவனித்துக் கொண்டிருக்க, வட கொரியாவில் மட்டும் எந்தவித மாறுதலும் இல்லாமல் மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் கவனம் செலுத்தினர். 

தென் கொரியா, சீனா உட்பட பெரும்பாலான நாடுகளில் டிரம்ப்-கிம் சந்திப்பே முக்கிய பேசுபொருளாக இருந்தது. ஆனால், சந்திப்பின் பிரதிநிதித்துவம் கொண்ட இரு நாடுகளில் ஒன்றான வட கொரியாவில் இந்த நிலை தலைகீழாக காணப்பட்டது. 

குறிப்பாக, அரச தொலைக்காட்சி சேனலில் கூட சிங்கப்பூர் சந்திப்பானது தாமதமாகவே ஒளிபரப்பப்பட்டது. உள்ளூர் செய்தி நிறுவனங்களும் இச்சந்திப்பின் மீது அந்தளவு ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், அமெரிக்க அதிபருடனான கிம்மின் சந்திப்பை வட கொரிய மக்களில் பெரும்பாலானோர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகின்றது.

News Counter: 
100

sankaravadivu